முக்கிய செய்திகள்:
கூட்டணி முடிவை உரிய நேரத்தில் மேலிடம் அறிவிக்கும்:ஜி.கே.வாசன்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,ஆம் ஆத்மி கட்சி 300 வேட்பாளர்களை அறிவிக்கலாம். அது போல காங்கிரஸ் கட்சி உடனே வேட்பாளர்களை அறிவிக்க இயலாது.

காங்கிரஸ் கட்சி பாரம்பரியமிக்க தேசிய கட்சி அவசரப்பட்டு வேட்பாளர்களை அறிவிக்காது. மூத்த தலைவர்களை கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும்.காவேரி நதி நீர் ஆணையத்திற்கு குழு அமைத்ததை வர வேற்கிறேன்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகள் உடனே முடிவு செய்து அறிவிக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அதன்படி உடனே முடிவு செய்ய இயலாது. யாருடன் கூட்டணி என்பதை உரிய நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்