Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
யானை தாக்கி உயிரிழந்த ரவிக்குமார் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி ஜெயலலிதா அறிவிப்பு - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
யானை தாக்கி உயிரிழந்த ரவிக்குமார் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி ஜெயலலிதா அறிவிப்பு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கோயம்புத்தூர் தெற்கு வட்டம், வடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ரவிக்குமார் 5.12.2013 அன்று காட்டு யானையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த ரவிக்குமார் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ரவிக்குமார் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்