முக்கிய செய்திகள்:
தே.மு.தி.க. பொதுக்குழு- செயற்குழுவில் கூட்டணி பற்றி முடிவு செய்ய விஜயகாந்துக்கு முழு அதிகாரம்

தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பொன்னேரி அருகே சென்னை– நெல்லூர் நெடுஞ்சாலையில் உள்ள எல்.கே.எஸ். திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

பொதுக்குழுவில் மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டணி பற்றி முடிவு செய்ய குழு அமைக்கப்படும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு மாநிலத்தின் வளர்ச்சியையும், மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு வழங்குவதாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் செய்திகள்