முக்கிய செய்திகள்:
டெஸ்கோ' நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேரமைப்பு முரசு இதழ் வெளியீட்டு விழாவை 21–ந்தேதி நடைபெறுகிறது.

டெல்லியில் தேசிய வணிகர்கள் மாநாடு மார்ச் 10, 11–ந்தேதி நடக்கிறது. இதில் திரளாக சென்று பங்கேற்பது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'டெஸ்கோ' நிறுவனம் டாடா நிறுவனத்துடன் சேர்ந்து, இந்தியாவில் சில்லறை கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழ்நாட்டில் டெஸ்கோ நிறுவனம் கடைகள் திறந்தால் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதில் வணிகர்களைகாக்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோலிய நிறுவனங்களின் வணிக உபயோக சிலிண்டர் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மேலும் செய்திகள்