முக்கிய செய்திகள்:
தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம்

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும் கச்சத்தீவை மீட்க கோரியும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அருகில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இலங்கை அதிபர் ராஜபச்சேயின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.

 

மேலும் செய்திகள்