முக்கிய செய்திகள்:
“சமூக நீதி”யின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டிருக்கிறார்:கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி ஓமந்தூரார் வளாகத்தை உருவாக்கி, அங்கே புதிய தலைமை செயலக கட்டிடம் மிக எழிலுறக் கட்டி முடிக்கப்பட்டது.

தற்போது அதே கட்டிடத்தில் புதிய மருத்துவமனையை நடத்தப் போவதாக அறிவித்து, தலைமைச் செயலக அலுவலகத்திற்காகவும், சட்டப் பேர வைக்காகவும் எனத் திட்டமிட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மருத்துவமனைக்கு உரிய விதத்தில் மாற்றியமைத்து, தற்போது அந்த மருத்துவ மனையில் பணியாற்றுவதற்காக டாக்டர்களையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியிலே முதல்–அமைச்சர் ஈடுபட்டிருக் கிறார்.

இந்த அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை 27.12.2013 அன்று பிறப் பிக்கப்பட்டுள்ளது. வேண்டு மென்றே, கழக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத் துவமனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற்போது அங்கே நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளுக்கும், டாக்டர் களுக்கும் சம்பளத்தையும் மிக அதிக அளவிலே அறிவித்திருக்கிறார்கள்.மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கான ஊதியம், தலா ஒன்றரை லட்சம் ரூபாய். இணை மருத்துவ ஆலோசகர் என்று 13 பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்.

என்ன சம்பளம் தெரியுமா? ஒருவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய். இளநிலை ஆலோசகர்கள் என்று 23 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கெல்லாம் தலா ஒரு லட்சம் ரூபாய் ஊதியம். பதிவாளர் என்று 14 பேர், மாதாந்திர ஊதியம் 70 ஆயிரம் ரூபாய். நிலைய மருத்துவர் என்று 19 பேர், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம். மேலும் இந்தப் பதவிகளுக்கெல்லாம் அதாவது இந்தப் பதவிகளுக்கு “இட ஒதுக்கீடு”” கிடையாது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின் படி, ஆந்திராவில் முன்னேறிய வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும் ஒரிசாவில் உயர்சாதியினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று கல்வி மற்றும் சமூக நிலைகளில் பிற்படுத்தப்பட்டோரையும், மிகப் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் முன்னேறிய வகுப் பினரைப் போலவே கருதி, நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதுமாகும். எனவே ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆகஸ்ட் திங்களில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இந்த முறையாவது இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வேறு மாநிலங்களில் செய்திருப்பதைப் போல; தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, பின் தங்கிய சமுதாயத்தினரைக் காப்பாற்ற முன் வர வேண்டும்“” என்று விரிவாக தெரிவித்திருந்தேன். எனினும் அ.தி.மு.க. அரசு சார்பில் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

மேலும் அ.தி.மு.க. அரசு, 22–11–1993 அன்று உச்ச நீதி மன்றத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம்; 50 சத விகித இட ஒதுக்கீட்டையே நடைமுறைப்படுத்துகிறோம் என்று உறுதி மொழி கொடுத்தது. இதிலிருந்து அவர்கள் மனதிலே எந்த கருத்து வேரூன்றி இருக்கிறதோ, அதைத் தான் வாய்ப்பு கிடைக்கின்ற நேரத்தில் எல்லாம் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது வெள்ளிடைமலை. திராவிட இயக்கக் கருத்துகள் வலிவு பெற்று விடக் கூடாது என்பது தான் அம்மையாரின் அடிப்படை எண்ணம் என்பது இப்போது மீண்டும் வெளியாகியிருக்கிறதல்லவா?

தற்போது இந்த சிறப்பு மருத்துவ மனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை “சமூக நீதி”யின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் அபாயத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட கி. வீரமணி போராட்டக்களங்களை உருவாக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது!இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகள்