முக்கிய செய்திகள்:
மோடி பிரதமர் ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு:இல.கணேசன்

பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. அ.தி.மு.க., தி.மு.க இல்லாத ஒரு மாற்று அணி பாரதிய ஜனதா தலைமையில் உருவாகும். அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

அ.தி.மு.க.வுக்கு, பாரதிய ஜனதாவுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாகவும் அதை கூட்டணியோடு ஒப்பிட்டுப் பேசி வருவதும் உண்மைதான். ஆனால் அவர்களும் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள்.

எங்கள் கூட்டணியில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். எனவே ஒரே கூட்டணியில் 2 பிரதமர்கள் இருக்க முடியாது. நட்புக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.ஆம் ஆத்மி கட்சி வளர்ச்சியால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கிறார்கள். நாங்கள் சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறோம்.

பாரதிய ஜனதாவின் தேர்தல், அஜெண்டாவில் கச்சதீவு பிரச்சினை முக்கிய இடம் பிடிக்கும். மோடி பிரதமர் ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்