முக்கிய செய்திகள்:
பேஸ் புக் மூலம் நடைபெறும் பிரச்சாரம் கட்டுபடுத்தபடும்:பிரவீன்குமார்

தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று அனைத்து கட்சிகளையும் அழைத்து தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதீயஜனதா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், ஜனவரி 6-ந்தேதி வெளியிடப்படவுள்ள வாக்காளர் இறுதிப்பட்டியல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பிரவீன்குமார் கூறியதாவது,

தமிழகத்தில் ஓரே கட்டமான தேர்தலை நடத்துவதை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும் வாக்கு பதிவு நடைபெறும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை ஓரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பேஸ் புக் மூலம் நடைபெறும் பிரச்சாரம் வரும் தேர்தலில் கட்டுபடுத்தபடும்.என்றார்

 

மேலும் செய்திகள்