முக்கிய செய்திகள்:
அம்பேத்கார் சிலையை திருமாவளவன் திறந்து வைக்கிறார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பொன் விழாவையொட்டி கேரள மாநிலம் மூணாறில் அம்பேத்கார் வெண்கல சிலையை அங்குள்ள விடுதலை சிறுத்தை அமைப்பு நிறுவியுள்ளது.அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலையை திருமாவளவன் நாளை திறந்து வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலம் இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. பி.டி.தாமஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மற்றும் சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேகுவேரா செய்துள்ளார்.

மேலும் செய்திகள்