முக்கிய செய்திகள்:
பா.ம.க. பொதுக்குழு சென்னையில் 2–ந்தேதி கூடுகிறது

பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் வரும் 2–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாசு ஆகியோர் இப்பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னிலை வகிக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை ஏற்கிறார்.முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், 2014–ம் ஆண்டில் ஆற்ற வேண்டிய பணிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதித்து முடி வெடுக்கப்பட உள்ளது. கூட்டத்தின் முடிவில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா நிறைவுரையாற்ற உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள், கட்சி துணை அமைப்புகளின் நிர்வாகிகள்,, வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்பு களின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த தலைமைப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்