முக்கிய செய்திகள்:
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா மரியாதை

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா இன்று காலை 10.45 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு வந்தார்.எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

விழா மேடையில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழியை படிக்க தொண்டர்கள் பின் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, மாதவரம் வி.மூர்த்தி, செல்லூர் ராஜு, சின்னையா, ரமணா, அப்துல்ரகீம், டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களும், மேயர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா எம்.பி., கலைராஜன், வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிவபதி, செந்தமிழன், வைகை செல்வன்.ரத்தினவேலு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெயக்குமார், கே.பி.கந்தன், குப்பன், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர்கள் செ.ம.வேலுசாமி, ராஜன் செல்லப்பா, துணை மேயர் பெஞ்சமின், கொறடா மனோகரன், நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ராமராஜன், தியாகு, தமிழ்மகன் உசேன். தென்சென்னை மேற்கு மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன், கவுன் சிலர்கள் டி.சிவராஜ், அலி கான்பஷீர் மற்றும் வில்லி வாக்கம் டி.கே.ரமேஷ், மனோகரன்.

அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை துணை செயலாளர் பாண்டுரங்கன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் லட்சுமி நாராயணன், ஏழுமலை, பழனி, முகப்பேர் செழியன், ராஜேஷ்கண்ணா, எம்.ஜி.ஆர். அறக்கடடளை தலைவர் பென்னிபிரபு, குடிசை மாற்று வாரிய தலைவர் கு.தங்கமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ், சி.பி.அசோக்குமார், தி.நகர் எஸ்.ஜெயராமன், ஆர்.வி.எம்.ஆனந்தன், வேதாச்சலம் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் முருகன் பெருமாள் அம்பத்தூர் நகர செயலாளர் அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் செய்திகள்