முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது:விஜயகாந்த் பேச்சு

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில், கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் கேக் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக (எம்.எல்.ஏ.க்கள் சென்று விடடதாக) மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அது போல தான் தே.மு.தி.மு.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.இங்கு பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னொரு கேப்டன் தேவைப்படுகிறது. ஒரு விமானத்தில் 2 கேப்டன்கள் இருப்பார்கள். ஒரு கேப்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் இன்னொரு கேப்டன் தான் காப்பாற்றுவார். எனவே இன்னொரு கேப்டன் சேர்த்து கொள்வது தவறு இல்லை என்றார். அதனால் நான் அவரது கருத்தை பரிசீலித்து முடிவெடுப்பேன்.

தமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை என முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால் தாம்பரம் தாண்டி விட்டால் 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்றதை பெருமையாக சொல்லுகிறார்கள். ஆனால் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது நினை வில்லையா?கூடுதல் விலை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு அதிகமாக வழங்க அரசு ஏன் முன்வரவில்லை. திருட்டுதனமாக ஆங்காங்கே மின்சாரம் திருடப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

தமிழகத்தில் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. தே.மு.தி.க. ஒன்றுதான் சாதி, மதமற்ற இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என 3 மத பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம்.பா.ஜனதா கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார். அதை நான் கண்டிப்பாக பரிசீலிப்பேன்.வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை எதிர்த்து பலமான கூட்டணி அமைப்பேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்

மேலும் செய்திகள்