முக்கிய செய்திகள்:
ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,650 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

மத்திய அரசின் ஆதார விலையான 2,100 ரூபாயோடு 100 ரூபாய் போக்குவரத்து செலவு உள்பட 550 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கிடையே வரவேற்கத்தக்கதாக அமையும்.கரும்பு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்