முக்கிய செய்திகள்:
அ.இ.அ.தி.மு.க. சார்பில் இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா - ஜெயலலிதா பங்கேற்று

அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 4 மணி அளவில் கிறிஸ்துமஸ் பெருவிழா, அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக்கினை பகிர்ந்துகொள்வதோடு, வாழ்த்துரை வழங்குகிறார். இதில், திருநெல்வேலி மறைமாவட்ட பேராயர் ஜெ.ஜெ.கிறிஸ்துதாஸ், கழக அமைப்புச் செயலாளர் டாக்டர்.பி.எச்.பாண்டியன், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர்.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

விழாவில், சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனிசாமி, தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயர் முனைவர் வே.தேவசகாயம் ஆகியோர் கிறிஸ்துமஸ் செய்தி வழங்குகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.வி.ரபி பெர்னார்ட் நன்றியுரை ஆற்றுகிறார். தமிழ் சுவிசேஷ லூத்ரன் திருச்சபையை சேர்ந்த மறைதிரு.எஸ்.எட்வின் ஜெயக்குமார் நிறைவு ஜெபம் நிகழ்த்துகிறார்.

 

 

மேலும் செய்திகள்