Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
தமிழகத்தில் காவல் துறையினர்களுக்கு பதவி உயர்வு - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
தமிழகத்தில் காவல் துறையினர்களுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் நான்கு ஏ.டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஆர்.சேகர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழல் கண்காணிப்பு பிரிவின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையின் டி.ஜி.பி.யாக மெகபூப் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. அசோக் குமார், லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சதீஷ் குமார் டோக்ரா ஆகியோரும் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதுதவிர மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. சீமா அகர்வால், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்