முக்கிய செய்திகள்:
தேர்தல் குறித்து எந்த கட்சியுடனும் பேச்சு வார்த்தை தொடங்கவில்லை: சென்னையில் வெங்கையாநாயுடு பேட்டி

பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

நடந்து முடிந்த 4 மாநிர சட்டசபை தேர்தலில் எமர் ஜென்சிக்கு பிறகு காங்கிரஸ் அடைந்த தோல்வியைவிட இப்போது படுதோல்வியை சந்தித்தது.

4 மாநில தேர்தலில் 70 சதவீத தொகுதியை பா.ஜனதாவும் 21 சதவீத தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

காங்கிரஸ் பாரம்பரியமாக வைத்திருந்த வாக்கு வங்கியை இப்போது இழந்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரினாமுல் காங் கிரஸ், தி.மு.க., ஒய்.எஸ்.ஆர் போன் கட்சிகள் வெளியேறி வருகின்றன. தீண்டதகாத கட்சியாக காங்கிரஸ் மாறிவருகிறது.

பாரதீய ஜனதா தேசியகுழு கூட்டம் ஜனவரி, 18, 19 தேதிகளில் நடக்கிறது. இதில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் பிரசாரங்கள் பற்றியும் இறுதி முடிவு எடுக்கப்படும் அதன் பிறகு ஒவ்வெரு தொகுதியிலும் மாநாடு நடத்தப்படும்.

இதுவரை கூட்டணி குறித்து எந்த கட்சியுடனும் பேச்சு வார்த்தை தொடங்க வில்லை. கூட்டணி பற்றி உரிய நேரத்தில் கட்சி தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி கேள்வி கேட்கையில் அவர் முதிர்ந்த அரசியல் வாதி. அறிவாளி, மக்களின் நாடி துடிப்பை அறிந்தவர் என்று வெங்கையாநாயுடு கூறினார்.

மேலும் செய்திகள்