Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24–ந்தேதி ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார் - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24–ந்தேதி ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 26–வது ஆண்டு நினைவு நாளான 24.12.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற் கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகி களும், அமைச்சர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்