முக்கிய செய்திகள்:
நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கலைச்செல்வன் நியமனம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மற்றும் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பால.நந்தகுமார் இன்று முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் குன்னூர் ஒன்றிய கழக செயலாளரும், பர்லியூர் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.கலைச்செல்வன், நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் குந்தா ஒன்றிய கழக செயலாளர் புத்திச்சந்திரன் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்