முக்கிய செய்திகள்:
சென்னையில் கருணாநிதி 21–ந்தேதி பேசுகிறார்

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் 15–ந்தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டங்கள் வருகிற 21–12–2013 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும்.

மாவட்டத் தலைநகரங்களில் உரையாற்றுவோர் விவரம் வருமாறு:–

தென்சென்னை – தி.மு.க. தலைவர் கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

விழுப்புரம் – துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, புதுக்கோட்டை – டி.ஆர்.பாலு எம்.பி., திருவண்ணாமலை – திருச்சி என். சிவா, கடலூர் – ஆ.ராசா எம்.பி.,

தூத்துக்குடி – கனிமொழி எம்.பி., மதுரை மாநகர் – தயாநிதி மாறன் எம்.பி., புதுச்சேரி – க.பொன்முடி, தருமபுரி வடக்கு – எ.வ.வேலு, திண்டுக்கல் – சுப்புலட்சுமி ஜெகதீசன், வேலூர் – ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி.

கோவை – ரகுமான்கான், தஞ்சை – கம்பம் பெ.செல்வேந்திரன், நீலகிரி கே.பி.ராமலிங்கம் எம்.பி., தேனி – டி.எம்.செல்வகணபதி எம்.பி., காரைக்கால் – பேராசிரியர் சபாபதிமோகன்.

கன்னியாகுமரி – பொன்.முத்துராமலிங்கம், திருவள்ளூர் – வாகை சந்திரசேகர், சேலம் – குஷ்பு சுந்தர்.

திருவாரூர் – கடலூர் இள.புகழேந்தி, கரூர் – நெல்லிக்குப்பம் புகழேந்தி, நாகை – எல்.கணேசன், திருச்சி – கோவி.செழியன்.

திருநெல்வேலி – குத்தாலம் அன்பழகன், மதுரை – புலவர் இந்திரகுமாரி, நாமக்கல் – புதுக்கோட்டை விஜயா.

சிவகங்கை – எம்.ஏ.நூர்ஜகான்பேகம், மா.சுப்பிரமணியன், பெரம்பலூர் – டாக்டர் காஞ்சனா கமல நாதன், திருப்பூர் – விஜயா தாயன்பன், கோவை  - மீனா லோகநாதன், ராமநாதபுரம் – குழந்தை தமிழரசன், அரியலூர் – சங்கரி நாராயணன், சாவல்பூண்டி சுந்தரேசன், தருமபுரி தெற்கு – வி.பி. ராஜன்.

விருதுநகர் – ஈரோடு இறைவன், ஈரோடு – குடியாத்தம் குமரன், கிருஷ்ணகிரி – தஞ்சை கூத்தரசன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்