முக்கிய செய்திகள்:
ராணுவக் குடியிருப்பில் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - முன்னாள் ராணுவ அதிகாரிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையில், ராணுவக் குடியிருப்பு பகுதியில், 13 வயது சிறுவனை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

சென்னை தீவுத்திடல் அருகே, ராணுவக் குடியிருப்புப் பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம், பாதாம் காய் பறிக்கச் சென்ற தில்சன் என்ற 13 வயது சிறுவனை, முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜ், தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, ராம்ராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. முன்னாள் ராணுவ அதிகாரி ராம்ராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்