முக்கிய செய்திகள்:
தாதுமணல் விவகாரம் தொடர்பான வழக்கு - தமிழக அரசு மேற்கொண்டுள்ள விசாரணை முறை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

தாதுமணல் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மேற்கொண்டுள்ள விசாரணை முறை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தென்மாவட்டங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும், தாதுமணல் முறைகேடு புகார் தொடர்பாக, சி.​பி.ஐ. விசாரணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள் திரு. ஜெயச்சந்திரன், திரு. வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தாதுமணல் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு நியமித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான திரு. ககன்தீப் சிங் பேடி தலைமையிலான விசாரணை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தது. எனவே, இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்