முக்கிய செய்திகள்:
தே.மு.தி.க.விலிருந்து விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன் - அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவிப்பு

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியுள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.​சார்பில் வகிக்கும் அவைத் தலைவர் உட்பட அனைத்துக் கட்சி பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகிக் கொள்வதாகவும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் திரு.தனபாலிடம், தனது எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா கடிதத்தை திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ​திரு.தனபால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்