முக்கிய செய்திகள்:
வங்கக்கடலில் உருவான மடி புயல், தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால், அடுத்த 72 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை அளவு அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான "மடி" புயல், தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால், அடுத்த 72 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை அளவு அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"மடி" புயல், தற்போது சென்னைக்கு வடகிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், இந்தப் புயல், படிப்படியாக வலு குறைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நெருங்கி வர வாய்ப்பு உள்ளதாக, கணினி சார்ந்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 72 மணி நேரம் கழித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும் எனவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தற்போது உள்ள நிலையே நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும், கடலோரப் பகுதி மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் சிவகிரி மற்றும் சாத்தான்குளத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்