முக்கிய செய்திகள்:
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக திரு. R.B. உதயகுமார் நியமனம்

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா பரிந்துரையின் பேரில், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக திரு. R.B. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையிலிருந்து திரு. K.V. ராமலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா பரிதுரையின் பேரில், தமிழக அமைச்சரவையில்​சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த திரு. K.V. ராமலிங்கம் விடுவிக்கப்பட்டு, இத்துறைக்கு சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. R.B. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. B.V. ரமணாவின் பொறுப்பிலிருந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, திரு. M.C. சம்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திரு. எம்.சி. சம்பத், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு. தோப்பு N.D. வெங்கடாசலத்தின் பொறுப்பிலிருந்த வருவாய் துறை, திரு. B.V. ரமணாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திரு. B.V. ரமணா, வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. M.C. சம்பத்தின் பொறுப்பிலிருந்த சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை, திரு. தோப்பு N.D. வெங்கடாசலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திரு. தோப்பு N.D. வெங்கடாசலம், சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு. R.B. உதயகுமார் நாளை மறுதினம் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் பதவி ஏற்க உள்ளார்.

மேலும் செய்திகள்